இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய பெறுகை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய ஐவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து மற்றும் ஏ.ஜி. புபுது அசங்க குணவங்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் கீழ், நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே குறித்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
ஜனாதிபதி இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம்!
புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!
தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக ...
|
|