இருவாரங்களில் மீண்டும்  குமுதினி படகுச்சேவை ஆரம்பிக்கும்!

Thursday, August 16th, 2018

குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு இன்னும் இரண்டு வாரத்திற்குள் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயந்திரக் கோளாறு காரணத்தினால் பழுதடைந்த இப்படகு ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்லப்பட்டு திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் படகு திருத்தும் பணிகள் இரண்டு வாரத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.

தற்போது நெடுந்தாரகை, வடதாரகை ஆகிய இரண்டு படகுகளுமே நெடுந்தீவுக்கான பயணிகள் சேவை யில் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: