இருபதாவது திருத்தச் சட்டத்துக்கான வர்த்தமானி வெளியானது!

Tuesday, August 8th, 2017

சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான அரசியல் யாப்பின் 20வது திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்படவிருந்த கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ளன.

இலங்கை அரசியல் யாப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜூலை மாதம் 28 ஆம் திகதி அச்சிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தல் ஒகஸ்ட் 3 ஆம் திகதியே வெளியிடப்பட்டது.

அதன்மூலம் சகல மாகாண சபைகளுக்குமான பிரதிநிதிகள் ஒரே தினத்தில் தெரிவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தினம் நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: