இருதரப்பு உறவுகள் ஸ்திரம்: பிரதமர் ரணில்

Thursday, April 7th, 2016

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை அவரது விருந்தினர் இல்லமான டியவோயூடாயில் இன்று (7) காலை 11.30 மணிக்குச் சந்தித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் உள்ள நீண்டகால நட்புறவினை வரவேற்ற சோங் தாவோ, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதனை வரவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும்  இரட்டை உறவுகளான  அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனத் தொழிற்சங்கக் கட்சிக்கும் இடையிலான உறவு ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: