இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஈ.பி.டி.பி. நிதி உதவி!

இருதய நோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் இருதய சத்திரசிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த றொபின்சன் கஜனா என்னும் குறித்த சிறுமியின் பெற்றோர் தமது மகளின் சிகிச்சைக்காக நிதி உதவி பெற்றுத்தருமாறு கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சிறுமியின் நிலைமையை அவதானத்தில்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினர் கட்சியின் செயலாளர் நாயம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுசென்றிருந்தனர்.
இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் சிபார்சக்க அமைவாக இன்றையதினம்(10) கட்சியின் நல்லூர் நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனால் குறித்த சிறுமியின் பெற்றோரிடம் மருத்தவ செலவுக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது கட்சியின் நல்லூர்த் பிரதேச வட்டார செயலாளர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|