‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று விண்ணுக்கு ஏவப்பட்டது!

Thursday, April 18th, 2019

இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் பகுதியில் வைத்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகிய இருவருமே இந்த ‘இராவணா வன்’ செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜப்பானின் கியூஷு தொழிநுட்ப நிறுவனத்தில், பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 2.16 மணியளவில் ஏவப்பட்ட செயற்கைக் கோளானது, நாளை மாலை 6.30 மணியளவில் விண்வெளியை அடையவுள்ளது.

Related posts: