இராணுவ பிரிகேடியர்கள் 9 பேருக்கு பதவி உயர்வு!

Friday, October 21st, 2016
இராணுவ பிரிகேடியர்கள் 9 பேர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் குறித்த பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

அஜித் ரூபசிங்க, சுனில் வன்னியாரச்சி ,சரத் வீரவர்தன ஹரேன் பெரேரா , ருவன் சில்வா, ரெல்ப் நுகாரா , நிஷாந்த வன்னியாரச்சி, அருன வன்னியாரச்சி மற்றும் மனோஜ் முதந்நாயக்க ஆகியோரோ பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த பதவிகளில் ஏற்கனவே இருந்த அதிகாரிகள் ஓய்வு பெற்றமையையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே , சிரேஷ்ட தகைமையை அடிப்படையாகக் கருதி குறித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

promosion


அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காது- முதலமைச்சர்களிடம் பிரதமர் உறுதி!
இந்திய பிரதமரின் விஜயத்தில் உள்நோக்கம் இல்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம்!
தேர்தல் தினத்தன்று முப்படைகளும் பணியில்!
காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட6 பிள்ளைகளின் தந்தை பரிதாபப் பலி !
வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53,000 இற்கும் அதிகம்!