இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைப்பு – இந்திய இராணுவ பிரதானி வியாழன்று இலங்கை விஜயம்!

Saturday, October 9th, 2021

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே,  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவ தளபதியின் விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (13) நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்தோடு இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்ற “மித்ர சக்தி” இராணுவ கூட்டுப் பயிற்சிகளின் இறுதிகட்ட நிகழ்வுகளையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: