இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை – பாதுகாப்புச் செயலர் உறுதி!

Saturday, January 2nd, 2021

போர்க்குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை – எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமை சபையின் மார்ச் மாத தொடரை மையப்படுத்தி பல கேள்விகள் முன்வைக்கபப்ட்டன. அதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது – 2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன. நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் ஆகும். எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்றார்.

Related posts: