இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 1200 படையினர் கைது!

விடுமுறைகளை பெறாது பணி்க்கு மீற திரும்பாத முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு தற்போது தொடர்ச்சியான தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் பொலிஸ் சேவை படையணி மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியாக இந்த பணியை முன்னெடுத்துள்ளன. கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி தொடக்கம் நேற்று நள்ளிரவு வரை விடுமுறை பெறாது பணிக்கு மீள சமூகமளிக்காத படையினர் 1200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரோஷான் செனவிரட்ன இந்த தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி, நேற்றைய தினம் வரை 984 காலாட்படையினரும், 236 கடற்படையினரும், வான்படையினர் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், 42,800 பேர் வரை பணிக்கு சமுகமளிக்காது தலைமறைவாகியிருப்பதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
|
|