இராணுவத்தின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்த விசேட செயற்றிட்ம்!  

Thursday, September 29th, 2016

67 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ஆசி பெறுவதற்காக ஶ்ரீ தலதா மாளிகைக்கு இராணுவத் தளபதி சென்றிருந்தார்.ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயுடன் கலந்துரையாடிய இராணுவத் தளபதி பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி முப்படையின் அனைத்து இராணுவ வீரர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இராணுவத்தினரின் நலன்புரி விடயங்கள், அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான விசேட செயற்றிட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். இராணுவத்தினரின் எதிர்காலத்திற்கு அவை போதுமானதாக அமையும் என நான் நினைக்கின்றேன். இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு இலங்கை இராணுவம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும். அர்ப்பணிப்புடன் செயற்படும்.

military

Related posts: