இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்!

Tuesday, December 7th, 2021

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 59 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இவரை நியமித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் லியனகே கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர் மற்றும் புதிய நியமனத்துக்கு முன்னர், இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர்.

சேவையில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுக்குப் பிறகு இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: