இராணுவத்தினரை ஏன் நினைவுகூரவில்லை? – பாரபட்சமாக செயற்படுகின்றது சர்வதேச மன்னிப்பு சபை என பாதுகாப்பு குழு தலைவர் குறிறச்சாட்டு!

புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் அக்னெஸ் கலமார்ட், புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்களவர்களையும் இராணுவத்தினரையும் ஏன் நினைவுகூரவில்லையென, தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பினார்.
புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்துக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர் கூறினார்.
மேலும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வியட்னா ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுவதாகவும், அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த 30/11 பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.
இதன் பின்னரே இராணுவத்துக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்தன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 30/1 பிரேரணையிலிருந்து விலகிய போதும், அப்பிரேரணையின் உள்ளடக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|