இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

Thursday, April 22nd, 2021

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நகரின் பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் 51-வது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவினரால் குறித்த செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண நவீன சந்தை பஜார் வீதி நீர் ஊற்றி கழுவ பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு கறித்த சுகாதார செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: