இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு!

Friday, September 10th, 2021

முல்லைத்தீவு, கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பேர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளித்துள்ளது.

இதற்கமைய, கரைச்சி பிரதேச செயலாளர் பி ஜெயகரனிடம் குறித்த காணியின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

57 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவின் முன்னிலையில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய காணியின் உத்தியோகபூர்வமாக ஆவணங்களை குறித்த அரச அதிகாரியிடம் கையளித்துள்ளார்..

சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: