இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்!
Wednesday, November 3rd, 2021நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை உற்பத்திகள்,கூட்டெருக்கள், இலைக் கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் விவசாயத்திலே முழுமையாக சேதனப் பசளையினை உபயோகப்படுத்த வேண்டுமென்ற ஐனாதிபதியின் நோக்கத்திற்கமைவாக இராணுவத்தினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளே இன்று அறிமுகம் செய்யப்பட்டது
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் கொடித்துவக்கு, யாழ் மாவட்ட விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|