இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!

Wednesday, July 27th, 2016

இலங்கை அரச தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(26) கையளித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார். செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.

Related posts:

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்...