இரவுவேளைகளிலும் திறக்கப்படும் தெகிவளை மிருகக்காட்சிசாலை!

Wednesday, September 20th, 2017

தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts: