இரத்தினக்கல் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி!

கடந்த 2 மாத காலப்பகுதியில் இரத்தின கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 28 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் உலக சந்தைக்கு மிகவும் தரமான நீல இரத்தினக்கல் மற்றும் பெறுமதியான இரத்தினக்கல் வகைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்பதாவது இடத்திற்கு இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அதேநேரம் 2020 ஆம் ஆண்டில் இரத்தினக்கல் மற்றும் தங்க நகை ஏற்றுமதி மூலம் 148 மில்லிய அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் இஸ்ரேல் நாட்டின் மூலமே அதிக வருமானம் கிடைத்துள்ளளதாகவும் இரண்டாவது அதிகூடிய வருமானம் அமெரிக்காவில் இருந்துமே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹொங்கொங், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மன், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இரத்தினக்கல் இறக்குமதியில் முன்னணி இடம்பிடித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|