இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை!

Tuesday, June 22nd, 2021

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதிக்காக வழங்கப்பட்டிருந்த சலுகைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இரத்து செய்ததாகவும் அந்த சலுகைகளை மீண்டும் வழங்குமாறும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தன.

இந்நிலையிலேயே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதியாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: