இரண்டு வாரத்தில் 25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

Monday, August 20th, 2018

எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் ஏழு பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தமை குறிபிடத்தக்கது.

Related posts: