இரண்டு வாரத்திற்குள்  உறுப்பினர்களை பெயரிடும் செயற்பாடுகள்!

Tuesday, February 20th, 2018

எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அந்தந்த கட்சிகளால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பது மற்றும் அந்தந்த கட்சிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் சபாநாயகர் தலைமையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதில் கட்சித் தலைவர்கள் , தேர்தல்கள் ஆணையாளர் , விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் , எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் போன்று சட்டமா அதிபரும் கலந்துக்கொண்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, இம்முறை தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் , தேர்தல் பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர பைஷர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: