இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, June 4th, 2021

நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 20 முதல் ஜூன் 2 வரை மொத்தம் 41 ஆயிரத்து 189 கோவிட் நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அளித்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு வாரங்களில் மூன்று நாட்களில் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, மே 20 ஆம் திகதி 3ஆயிரத்து 441 பேரும், 21 ஆம் திகதி 3 ஆயிரத்து 583 பேரும், ஜூன் 2 ஆம்ம் திகதி 3 ஆயிரத்து 306 பேரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் பெரும்பான்மையான கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் 51 ஆயிரத்து 182 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 35 ஆயிரத்து 563 பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 952 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் நேற்றையதினமும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 264 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: