இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கை – ஜனாதிபதி!

Sunday, February 17th, 2019

நாட்டில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

மனைவியைத் தாக்குகின்றனர், பொருட்களை நிலத்தில் வீசுகின்றனர், நோய்வாய்ப்படுகின்றனர் இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என அவர்கள் அறிவார்கள். எனினும் தவறான விடயங்களை செய்து அழிந்து போகின்றனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு  அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: