இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குடிசன மதிப்பீடு கணிக்க முடிவு!

Tuesday, May 15th, 2018

இரு வருடங்களுக்கு ஒருமுறை நாட்டில் வீடுகள் மற்றும் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் குடிசன மதிப்பீடு புள்ளி விவரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குடிசன மதிப்பீடு புள்ளிவிவரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க மேலும் தெரிவிக்கையில் -பத்து வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கமைய மே மற்றும் ஜீன் மாதங்களில் வீடு மற்றும் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்.

திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக பயிற்சிபெற்ற அதிகாரிகள் சிலர் இந்த இரண்டு மாதங்களிலும் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: