இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Saturday, July 20th, 2019

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இரண்டு மாவட்டங்களிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் அந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டும். மண் சரிவினால் ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் தங்கள் மீது அக்கறை எடுத்து ஆபத்தான பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: