இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் – மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை மேற்கொண்டுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, April 29th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்த ஒப்பந்தம் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனகிடையே முறையற்ற சந்தைகளூடாக கிடைக்கப்பெறும் டொலரை முறையான வங்கி கட்டமைப்பினூடாக பயன்படுத்தக்கூடிய முறைமை தொடர்பில் புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்..

கொழும்பு வர்த்தக சபை கூட்டம் நேற்று (28) நடைபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் செல்லமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாடுகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தற்போது இலங்கையில் காணப்படும் முதன்மை பிரச்சினையாக இருந்தாலும், கடனை திருப்பி செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முழுமையான நிதிக்கொள்கைக்கான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கை சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: