இரண்டு மாதங்களில் 16479 பேர் டெங்கினால் பாதிப்பு – சுகா­தார அமைச்சு!

Friday, March 3rd, 2017

நாட­ளா­விய ரீதியில் இவ்­வ­ரு­டத்தின் கடந்த இரு­மாத காலப்­ப­கு­திக்குள் 16479 டெங்­கு­நோ­யா­ளர்கள் இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

 டெங்கு நோய் குறித்து மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் வேலைத்­திட்­டத்தின் அடிப்­ப­டையில் மார்ச் 29 ஆம் திகதி முதல் ஏப்­ரல் 4 ஆம் திகதி வரையான காலத்தை தேசிய டெங்கு ஒழிப்பு வார­மாக பிர­க­ட­ னப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சு விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் குறிப்­பிடப்பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­திக்குள் 16479 டெங்­கு­நோ­யா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். அத­ன­டிப்­ப­டையில் கொழும்பு மாவட்­டத்தில் 4136 பேரும் கம்­பஹா மாவட்­டத்தில் 2192 பேரும் காலி மாவட்­டத்தில் 1196 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

 யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 996 பேரும் திருக்­கோ­ண­ம­லையில் 824 பேரும் களுத்­துறை மாவட்­டத்தில் 819 பேரும் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். கடந்த வரு­ட முற்­ப­கு­தியில் பதி­வா­கிய டெங்­கு­நோ­யா­ளர்­களை விடவும் இம்­முறை நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 11133 டெங்­கு­நோ­யா­ளர்­களே இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நாட­ளா­விய ரீதியில் அமைச்­சினால் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கென 500 க்கும் மேற்­பட்ட குழுக்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்டு டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­துடன் புதி­தாக குறித்த டெங்கு ஒழிப்பு பணியில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நிய­மனம் இன்று வியா­ழக்­கி­ழமை சுகா­தார அமைச்­ச­ரினால் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

டெங்கு நோய் குறித்து மக்கள்  தொடர்ந்தும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. சுற்­று­பு­றச்­சூ­ழலில் டெங்கு பரவும் கார­ணி­களை அகற்றி தூய்­மை­யாக வைத்­தி­ருக்­கு­மாறும் மூன்று நாட்­க­ளுக்கு மேலாக தொடர்ந்தும் காய்ச்சல் இருந்தால் அல்­லது உடம்பில் சிவப்பு நிறத்­தி­லான அடை­யாளம் மற்றும் டெங்கு அறி­கு­றிகள் காணப்­பட்­டாலே உட­ன­டி­யாக வைத்­திய ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்­ளு­மாறு அமைச்­சினால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

 டெங்கு நோய் தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வூட்­டு­வ­தற்கு மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்­பிரல் மாதம் 4 ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு வார­மாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. டெங்கு நோய் பரவும் வகையிலான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ள துடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவ டிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ministry-of-health

Related posts: