இரண்டு மாதங்களில் 16 இன ரீதியான வன்முறை சம்பவங்கள் – காவல்துறை ஊடக பேச்சாளர்!

கடந்த இரண்டு மாதங்களில் 16 இன ரீதியான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊடக சந்திப்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் பிரியந்த ஜெயகொடி இதனை குறிப்பிட்டார் இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இவர்களில் ஒருவர் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர் எனவும், அவர் நான்கு தாக்குதல் சம்வங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார் அத்துடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் புத்தரை சமூக வலைத்தளங்களில் நிந்தனை செய்த ஒருவரும் மற்றைய இருவரும் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டையுடைவர்கள் எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
3 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பல கோணங்களில் விசாரணை!
இத்தாலி சென்றார் ஜனாதிபதி!
இன்றுமுதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும் - வெளியானது புதிய சுகாதார வழிகாட்ட...
|
|