இரண்டு மாதங்களில் சினோபெக் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவிப்பு!
Monday, June 5th, 2023இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்
திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது
அதன் பின்னர் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கப்படும் , பின்னர் நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமையும் நீக்கபடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
சீனாவை நோக்கி நகரும் லெக்கிமா !
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை - சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
|
|