இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ஆபத்து – மக்களுக்கு சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை!

Wednesday, May 3rd, 2023

நாட்டில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின்படி, மூன்று டெங்கு வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே காய்ச்சல் வந்தால், இரண்டாவது நாளில் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் டெங்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு தாமதமாக வரும்போது உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்குகளை அடைவதற்கு அனைத்து சக்தியையும் அர்ப்பணிக்க தயார் – ஜனாதிபதி...
குடியேறிகள் சுகாதார கொள்கையை தயாரிப்பதற்கான அனுபவத்தை பெற்ற மாலைத்தீவிலிருந்து 17 பேர் அடங்கிய குழுவ...
ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் மீண்டும் ஆரம்பம் - சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ...