இரண்டு அமைச்சுகளின் செயலாளர்களை மாற்றிய ஜனாதிபதி – 6 அரசாங்க நிறுவனங்களுக்கும் புதிய தலைவர்கள் நியமனம்!

Monday, May 22nd, 2023

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும், 6 அரசாங்க நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களையும் நியமிப்பதற்கு நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக திருமதி யமுனா பெரேராவும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகரவின் நியமனத்துக்கு உயர் அதிகாரிகள் குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தின் உதவிப் பொதுச் செயலாளர் டிக்கிரி கே. ஜயதிலக தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ஷவை நியமிப்பதற்கும் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை அணுசக்தி வாரியத்தின் தலைவராக பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா நியமனத்திற்கும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரத்னசிறி களுபஹனவை நியமனத்திற்கும் உயர்நிலைக் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: