இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் II க்கான போட்டிப்பரீட்சை!

Wednesday, October 18th, 2017

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக இரண்டாவது சேவை நிறைவேற்று அதிகாரி பதவி தரம் ii க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான பகிரங்க போட்டிப்பரீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 3780 பரீட்சார்த்திகளுக்கென கொழும்பில் 24 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை இம்மாதம் 11 ஆம் திகதி தபாலில் சேர்க்கப்பட்டுள்ளன. பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் பரீட்சை அனுமதி அட்டை தொடர்பிலான விபரங்களை திணைக்களத்தின் வெளிநாட்டு பரீட்சைகள் கிளையுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

தொலைபேசி இலக்கம் : 0112785230 ஃ 0112177075 மற்றும் அவசர தொலைபேசி இலக்கம் 1911 மூலம் 24 மணித்தியாலங்களும் தொடர்பினை மேற்கொள்ளலாம்

Related posts: