இரண்டாம் நிலை வாகனங்களின் விலை அதிகரிப்பை அரசால் கட்டுப்படுத்த முடியாது – போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Thursday, September 24th, 2020வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சந்தையில் உள்ள இரண்டாம் நிலை வாகனங்களின் விலை பாரியளவில் தற்போது உயர்ந்துள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இந்த தற்காலிக தடை நிரந்தரமானது அல்ல. பணப்புழக்கத்தை உறுதிப்படுத்த இது விதிக்கப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் தளர்த்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அமுனுகம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|