இரண்டாம் தவணையிலிருந்து மாணவர்களுக்கு காப்புறுதி – வடக்கு கல்விச் செயலர் அறிவிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பத்திலிருந்து, பாடசாலை மாணவர்களுக்கான 2 இலட்சம் ரூபா பெறுமதியிலான காப்புறுதித் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழி யப்பட்ட திட்டமே இவ்வாறு செயலுறுப் பெறவுள்ளது.“பாடசாலை மாணவர்கள் அனைவரும் இந்தத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். மாண வர்களுக்கான காப்புறுதிப் பணம் தினமும் ஒரு ரூபா செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு செலுத்தும் ஒரு ரூபா பாடசாலை நாள்களுக்கு மட்டுமா? அல்லது தினம்தோறுமா? என்பது போன்ற விவரங்கள் எதிர்வரும் வாரம் அமைச்சால் முழுமையான சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|