இரண்டாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று!

Friday, November 1st, 2019

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினமும்(01) இடம்பெறவுள்ளது. நேற்று(31) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 வரை தபால் மூல வாக்களிப்பு, அமைதியான முறையில் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் தேர்தல்கள் அலுவலகங்கள், மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகள், எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்களுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் தபால் மூல வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts: