இரணைமடு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, June 28th, 2023

இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் மீன்பிடி வலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்களுக்கு விரைவில் தீர்வுகள் எட்டப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்-கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் இரத்தினம் அமீன் தெரிவித்தார்

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையிலான மீன்பிடி வலைகள் பிரச்சனைகளை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது.

கலந்துரையாடல் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சங்கீதன் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்த சந்திப்பில் இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் மீன்பிடி வலைகள் தொடர்பான பிரச்சினைகள் முழுமையாக ஆராயப்பட்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலமாக அதற்கான தீர்வுகள் விரைவில் எட்டப்படும் என்று தெரிவித்த இணைப்பாளர். அதே நேரம் அவ்வாறான தீர்வினை எட்டுவதற்கு சங்க உறுப்பினர்கள் இரண்டு அணியாக இல்லாமல் ஒரே அணியில் அணித்திரண்டு செயற்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர் இரத்தினம் அமீர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள், தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஒருங்கிணைப்புக்குழு அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts: