இரணைமடு குளத்தின் கீழ் 20 ஆயிரத்து 882 ஏக்கரில் பயிர்ச் செய்கை – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, October 2nd, 2021

கிளிநொச்சி, இரணைமடுகுளத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்றுமுழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20 ஆயிரத்து 882 ஏக்கர் பரளப்பளவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தின் கீழான பயிர்ச் செய்கை கூட்டம் மெய்நிகர் செயலி ஊடாக இடம்பெற்றது.  இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம் முறை புதிதாக 500 ஏக்கர் பரளவு நெற் பயிர்ச் செய்கைக்கு உள் வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனை பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. கால போக பயிர்ச் செய்கை ஆரம்ப திகதியாக 06.10.2021 ஆகவும் இறுதி அறுவடைத் திகதி 28.02.2022 ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதனை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசினால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்திற்கு 90.2 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: