இரணைமடுக் குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளர் நியமனம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளராக, பொறியியலாளர் பிரகாஸ் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்பபாசனக் குளமான வவுனிக்குளத்தின் நீர்பாசனப் பொறியியலாளராக இதுவரை காலமும் பணியாற்றிய இவர் இன்று (03.06.2024) முதல் புதிய நீர்ப்பாசன பொறியியலாளராக கடமைகளை ஏற்கவுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் வவுனிக்குளத்தின் கீழ் சரியான நீர் முகாமைத்துவத்தினை மேற்கொண்டு பெரும்போக மற்றும் சிறுபோக செய்கைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு அயராது உழைத்தவர்.
மேலும், வரட்சியின் போது நெற்செய்கை மற்றும் சிறுதானிய செய்கை என்பவற்றை வெற்றிகரமாக செய்து மாவட்டத்தின் நெல் உற்பத்திக்கு பெரும்பங்காற்றியவராக வவுனிக்குளம் விவசாயிகளால் மதிப்பளிக்கப்படும் நிலையில் இன்று தமது கடமைகளை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பட்டதாரிகள் தேர்வுக்கு 203 பேர் தோற்றவில்லை - மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பு!
நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் - ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...
|
|