இரணைதீவு மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Sunday, April 29th, 2018

இரணைதீவு விடுவிக்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களையும் ஆர்பட்டங்களையும் நடத்திய மக்கள் எதுவித தீர்வுமின்றி நிலையில் இரணை தீவை நோக்கி சென்று அங்கு தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்

இவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்கும் பொருட்டே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான வை தவநாதன் தலைமையில் ஆன குழுவினர் இன்று இரணை தீவு மக்களை சந்தித்தனர்

கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் பூநகரி பிரதேச சபை உறுப்பினர் பிரதீபன் பளை  பிரதேச அமைப்பாளர் பொன் கார்த்தி உட்பட பலர் இந்த குழுவில் அங்கம் வகித்தனர்

போராளி மக்களின் உணவுத் தேவைகளை கொண்டு செல்லபட்ட ஒரு தொகுதி உணவு பொருட்களும் கட்சியின் பூநகரி பிரதேச சபை உறுப்பினரும் இரணை தீவு மக்களின் பிரதிநிதியுமாகிய பிரதீபனிடம் மாவட்ட அமைப்பாளர் வை தவநாதன் அவர்கள் இதனை கையளித்தார்.

இதனை அடுத்து மக்களின் கருத்துகளை பரிமாற்றி  கொண்ட மாவட்ட அமைப்பாளர் வை தவநாதன் அவர்கள் கட்சியின் தலைவர் பா.உ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைதீவு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாக தொடர்த்தும் பாராளுமன்றில் கருத்து வெளீயீட்டு வருவதாகவும் பா உ டக்ளஸ் தேவானந்தா பேரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர்கள் நிதி பங்களிப்பில் ரூபாய் 5 லட்சம் இரணைதீவு அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்கி தர விருப்பம் தருவதாக மக்களிடம் உறுதியளித்தார் இந்தன் அடிப்படையில் மக்களின் தேவைகள் பகுப்பாய்வு செய்யபட்டு மக்களின் தேவைகளுக்கு வழங்கப்படும் எனவும் வை தவநாதன் அவர்கள் தெரிவித்தார் இதனை அடுத்து மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளை தெருவித்தனர்.

Related posts:


தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை: ஆனாலும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் - வட...
முகக்கவசம் அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பி.சி.ஆர் பரிசோதனை - பொலிஸ் ஊடகப் பேச்சா...