இரட்டைச் சகோதரிகளின் சாதனை!

வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இரட்டைச் சகோதரிகள் ஒரே புள்ளிகளைப் பெற்று சாதனைப்படைத்துள்ளனர்.
காலி – கிங்தொட்ட பியதிகமவைச் சேர்ந்த கே.எம்.எச் சிஹலி சிதுமியா மற்றும் மஹெலி நெதுமியா ஆகிய இரட்டைச் சகோதரிகள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.ஒன்றாக பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்று, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.இதேவேளை, இரட்டைச் சகோதரர்களின் தந்தையான கே.எம்.எச். ரஞ்சித் குமார ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றுவதுடன், தாயாரான சுஜீவா மனோகரி தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது கல்விச் செயற்பாடுகளில் மும் மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த வேண்டும்- யாழ். மாவட...
ஓர் மீன்கள் இறப்பு – உலக அழிவுக்கான எச்சரிக்கை என மக்கள் அச்சம்?
நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் – ஐக்கியத்துக்காக அமைச்சு பதவியையும் துறக்க தயார...
|
|