இரட்டைக் குடியுரிமை மேலும் 1700 பேருக்கு!
Sunday, September 11th, 2016இரட்டைக் குடியுரிமை கோரியுள்ள மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வருடத்தின் மார்ச் மாதம் முதல் தற்போது வரை 1400 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டளர் நாயகம் நிஹால் ரணசிங்க கூறினார்.
இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை மாதாந்தம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
Related posts:
இலங்கைத் தீவின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று !
சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு - ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் கவலை!
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கருத்தை யதார்த்தமாக்க இலங்கை கைத்தொழில்...
|
|