இரசாயன மருந்து விசிறப்பட்ட பழங்கள் யாழ்ப்பாணத்தில் அமோக விற்பனை!

Wednesday, May 23rd, 2018

யாழ். குடாநாட்டில் இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த மாம்பழங்கள் தாராளமாக சந்தைகள் மற்றும் பொது இடங்களில் வைத்து விற்கப்பட்டு வருகின்றன. தற்போது மாம்பழம் மற்றும் பலாப்பழ சீசன் ஆரம்பமாகியுள்ளன.

விவசாயிகள் சிலர் வியாபார நோக்கத்திற்காக காய் மாங்காய்களை பறித்து அவற்றிற்கு இரசாயன மருந்துகளை விசிறி பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைத்த பழங்களை நுகர்வோர் வாங்கி உண்பதால் நோய்த் தாக்கமும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகிறது. எனவே இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சுகாதார பிரிவினர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: