இரசாயன உரதிற்கான தடையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது – அது தேர்தல் வாக்குறுதி அல்ல என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவிப்பு!
Monday, October 25th, 2021அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சேதன பயிற்செய்கையை பயன்படுத்துவதற்கான முடிவு மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது தேர்தல் வாக்குறுதி அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதுளையில் ஊடகங்களுக்ககருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகையில் – , எவரும் விரும்பாத தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும், சுயநலமாக இந்த தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எவ்வாறான குறைபாடுகள் இருந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்றும் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு அறுவடை குறைவாக இருந்தால், ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|