இரகசிய வாக்கெடுப்பில் 44 உறுப்பினர்கள் வாக்களிப்பு!

யாழ் மாநகர முதல்வர் தெரிவுக்காக நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 44 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் யாழ் மாநகர சபையை நிர்வகிப்பது யார் என்ற பலப்பரீட்சையில் மும்முனைப் போட்டி காணப்பட்டது.
குறித்த மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் ஆர்னோல்ட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் சட்டத்தரணி மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரபல சட்டத்தரணி ரெமீடிய ஆகியோர் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் யாழ் மாநகரக்கான 45 மொத்த உறுப்பினர்களில் 44 உறுப்பினர்கள் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
தற்போது உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|