இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் பெரும் கவலை!

Tuesday, May 12th, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்றையதினம் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதழல் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்..

கடந்த 6 ஆம் திழகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு நேற்று 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட நிலையில் அநேக பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை மக்கள் வருகை குறைவு காரணமாக சோபையிழந்த நிலையில் காணப்படுவதுடன், பொதுமக்கள் பொருளை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம் காட்டாத நிலையே அவதானிக்க முடிந்தது..

அத்தோடு வியாபார நிலையங்களுடன் பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும் வங்கிகளிலும் மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அச்ச நிலைமை காணப்படுவதுடன், பெரும்பாலும் அன்றாட தொழில் செய்யும் மக்களிடம் பண வசதியின்மையாலும் மக்களின் வருகை குறைவாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே மக்கள் வியாபார நிலையங்களுக்கு பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதென பரவலாக பேசப்படுகின்றது. அத்துடன் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் மருந்தகங்களில் பொதுமக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதி முறைகளின் படி ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் தேவைகளை .பெற்றுக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது

Related posts:

நாட்டுக்குள் கடல் வழியாக போதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படை...
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பி...
திருட்டு அதிகரிப்பு - பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகார...