இயல்பு நிலையை கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வர்த்தமானி – பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் பொதுவான நடவடிக்கைக்காக மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் வேலை திட்டம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் சிலவற்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடப்படுகின்றது.
பொதுமக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஆரம்ப கட்டமாக மே மாதம் 11ஆம் திகதிமுதல் பொது மற்றும் தனியார் நிறுவனங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான பொறுப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். பணியமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|