இயற்கை உர உற்பத்தி நிலையங்களுக்கு ஜனாதிபதி விஜயம்!

Thursday, November 18th, 2021

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் அனுராதபுரம், ஓயாமடுவ மற்றும் சேனநாயக்க மாவத்தையில் இயங்கும் 17 இயற்கை உரம் பொதி செய்யப்படும் நிலையங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில்இயற்கை உரங்களை உற்பத்தி செய்கிறது.

ஜப்பானிய வெல்லம், ஜின்ஸெங், கோழி எரு, உலர்ந்த சாணம் மற்றும் எப்பாவல ரொக் பொஸ்பேட் ஆகியவை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை பெரும் போகத்திற்காக 50,000 மெற்றிக் தொன் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய காணி சீர்திருத்த ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

ஓயாமடுவ, சேனநாயக்க மாவத்தை, பதவிய, மஹில்லுப்பல்லம, எப்பாவல மற்றும் தலாவ, அனுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள 6 நிலையங்களில் உரங்கள் பொதி செய்யப்பட்டு, கொமர்ஷல் உர நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றன.

பின்னர் கொமர்ஷல்  உர நிறுவனம் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விவசாய சமூகத்திற்கு அந்த  உரங்களை விநியோகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: