இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்க யாழ்.மாவட்டச் செயலகத்தினாலும்  நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

Saturday, May 21st, 2016

இயற்கை இடரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   எனவே, உதவிப் பொருள்களை வழங்க விரும்புவர்கள் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க  அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இடர் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும், விநியோகித்தலும் பொறிமுறை யாழ்.மாவட்டச் செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்கொடைகளை வழங்க முன்வரும் நலன் விரும்பிகள் இது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச.ரவியுடன் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: