இயற்கை அனர்த்தம் – சில வாரங்களுக்கு முன்னரே எச்சரித்த சர்வதேசம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அடைமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இலங்கையின் தென்பகுதி பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளது.
இது வரை ஏழு பேர் உயிரிழந்ததுடன் 12 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தென் பகுதியில் பல பகுதியில் நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டுள்ள போதிலும் சில பகுதிகளில் இன்னும் வழமைக்கு திருப்பவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பலத்த காற்று காரணமாக கொழும்பின் பிரதான நகரங்கள் உட்பட பல இடங்களிலுள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு வானிலை அறிக்கைகளுக்கு அமைய சூறாவளி நிலைமை தொடர்பில் அல்லது வெள்ள நிலைமை தொடர்பில் மக்கள் பதற்றமடைய தேவையில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவிப்பு விடுத்திருந்தது.
எனினும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஏற்படவுள்ள ஆபத்து தொடர்பில் வெளிநாட்டு இணையத்தளங்கள் பல இதற்கு முன்னரே சுட்டிக்காட்டியது.அந்த அறிக்கைகளுக்கு அமைய வாரதித்தின் இடைப்பகுதியில் இலங்கையில் காலநிலையில் மாற்றம் அல்லது அடை மழையினை அவதானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வார இறுதியில் வங்காள விரிகுடா ஊடாக அந்தமான் நிகோபார் தீவு மற்றும் இலங்கையை அண்மித்த பகுதியில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Related posts:
|
|